2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

கட்சித்தாவலுக்கு எதிரான மக்கள் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ஐ.தே.க.வேட்பாளர் முஸம்மில் கைச்சாத்து

Super User   / 2010 ஏப்ரல் 03 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மக்கள் இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் நேற்று ஊடகவியலாளர் முன்னிலையில் கைச்சாத்திட்டார்.

கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஏ.ஜே.எம் முஸம்மில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தாம் மக்களுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன்மூலம்,நாடாளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்  எதிர்காலத்தில் எந்தவொரு குடிமகனும் தனக்கு எதிராக சட்ட நடவடிகை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக  யானைச்சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.முஸம்மில் போட்டியிடுகின்றார்.

மக்களிடம் வாக்குகளைப்பெற்றவர்கள் தாம் விரும்பியபடி கட்சித்தாவலை மேற்கொள்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு இதுபற்றி தெரியுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இது கேள்விப்பட்டால் ரணில் விக்கிரமசிங்ஹ மிகவும் மகிழ்ச்சியடைவார் என்றும் ஏ.ஜே.எம்.முஸம்மில் பதிலளித்தார்.    

ஐக்கிய தேசிய்க்கட்சியின் வேட்பாளர்கள் கட்சியுடன் மாத்திரம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் தாம் இன்று மக்களின் முன்னிலையில் வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .