2021 ஜூன் 19, சனிக்கிழமை

கண்டி மாவட்ட ஆளும் கட்சி வேட்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களிடமிருந்து, நாவலப்பிட்டி தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குழுவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களான கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரிடமிருந்தே மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதேவேளை, ஏனைய கட்சிகளிடமிருந்து இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவிருப்பதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டான் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடு திரும்பியதும் இது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டாரத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு குறிப்பிட்டன.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாவலப்பிட்டியில் பகுதியில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .