2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கம்பஹா மாவட்டத்தில் பசில் ராஜபக்ஸவுக்கு முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பசில் ராஜபக்ஸ 425,861 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று  முன்னிலையில் உள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட ருவான் விஜயவர்த்தன 88,850 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக சுதர்சினி பெர்னாண்டோபிள்ளை 186,140 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். மேர்வின் சில்வா 151,085 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும், அத்துரலிய ரத்தின தேரர்  112,010 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளார். 

மேலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் உபெக்ஸா  சுவர்ணமாலி  81,350 வாக்குகளைப் பெற்று இரண்டாம்  இடத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், மூன்றாம், நான்காம் இடங்களில்  கரு ஜயசூரிய 60,310 வாக்குகளையும், ஜயலத் ஜயவர்த்தன 58,302 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .