2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

குற்றப் புலனாய்வு பிரிவில் ராஜித சேனாரத்ன முன்னிலை

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (14) ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக  அவர் அங்கு சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ள நிலையில், அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருதய நோய் காரணமாக ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைகளின் பின்னர் இன்று (14) அதிகாலை ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.

இதேவேளை, வெள்ளை  வேன் ஊடக சந்திப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று (13) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .