Freelancer / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரேம் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (06) நண்பகல் 12.12 அளவில் மாராவில், பொதுஹெர, குருகெட்டே, கல்முனை, கெர்தலாவெல மற்றும் வராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .