2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் இன்று இடம்பெறுகின்ற மீள் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு,  கிழக்குப் பல்கலைக்கழத்தின் அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

தமிழ்மிரர் இணையதளத்திடம்  இன்று கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் த.பாஸ்கரன் இதனை தெரிவித்தார்.

மேற்படி பரீட்சைகள் 19ஆம், 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறவிருந்ததாகவும் அவர் கூறினார்.

பிற்போடப்பட்டிருக்கும் பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் எனவும் த.பாஸ்கரன் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .