2021 ஜூன் 16, புதன்கிழமை

கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம்,   இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சு, பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்திடமிருந்தோ அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தோ தகவல் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டது. எனவே, இது தொடர்பில் அரசாங்கத்தால் கவனம் செலுத்த முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ஸவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .