2021 மே 15, சனிக்கிழமை

சுகாதார அமைச்சுக்கு புதிய பணிப்பாளர்

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் நிதி முகாமைத்துவத்துக்காக, பணிப்பாளர் நாயகமாக ஒருவரை நியமிக்கப் போவதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சுகாதார சேவையை வினைத்திறன் மிக்கதாக்குவதே, இந்த நியமனத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2010க்கு முன்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தை பெற தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

களுத்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ சேவை மற்றும் இருதய நோய்ப் பிரிவு என்பனவற்றுக்கான கட்டடத் திறப்பு விழாவின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, புதிய தாதிய பீடத்துக்கான அடிக்கல், அடுத்த மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் நாட்டப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .