2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு தலைக்கணம் இருப்பதாக  தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னர் வாக்குறுதியளித்தபடி, தேசியப் பட்டியலில் தமது கட்சியின் இரு உறுப்பினர்களை உள்ளடக்கத் தவறியிருப்பதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை சுசில் பிரேமஜயந்த தவறாக எண்ணியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்த இருக்கலாம். ஆனால், அவர் ஏனைய கட்சிகளின் விடயத்தில் தீர்மானிப்பதற்கான உரிமை இல்லை எனவும் விமல் வீரவன்ஸ சுட்டிக்காட்டினார்.
  Comments - 0

  • xlntgson Thursday, 22 April 2010 10:16 PM

    தேசிய பட்டியல் தயாரிப்பதில் கட்சித்தலைவருக்கு இல்லாத அதிகாரம் செயலாளருக்கு எங்கிருந்து வரும்? சுற்றி வளைத்து பேசுகிறார் வீரவன்ச, சந்திரனை பார்த்து நாய் குரைத்த கதைதான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .