2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சாதாரண தரப்பரீட்சை: விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

Editorial   / 2017 மே 29 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையை கவனத்தில்கொண்டு 2017 கல்விப் பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

கால எல்லையை நீடிக்குமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த விண்ணப்பங்களைப் பொறுப்பேற்பதற்கான கால எல்லை, ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .