2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சிறுமிகள் மீது துஷ்பிரயோகம் பொலிஸார் தீவிர விசாரணை

Super User   / 2010 மே 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார்என்ற குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் மீதான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன் குறித்த சிறுமிகள் தங்கியிருந்த விடுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

15 மற்றும் 17 வயதுடைய இந்த சிறுமிகள் சம்பவம் தொடர்பில் தங்களது வகுப்பாசிரியர்களுக்கும் அதிபருக்கும் தெரிவித்ததை அடுத்தே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்த விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மேற்படி பிக்கு கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .