2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சிவாஜிலிங்கத்தின் கட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் வேட்பு மனு தாக்கல்

Super User   / 2010 பெப்ரவரி 26 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,ரி.ஸ்ரீகாந்தா ஆகியோர் அதிலிருந்தும் பிரிந்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற புதிய கட்சியொன்றை கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்மிரரின் கேள்விக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தமது கட்சி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இடது சாரி முன்னணியுடன் இணைந்து குடை சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது எனத்தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரிலும்,வெளி மாவட்டங்களில் இடதுசாரி முன்னணி என்ற பெயரிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0

  • ga Saturday, 27 February 2010 11:07 AM

    this is better than TULF or TNA
    Can u join both Gajenhirans

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .