Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு இன்று (07) அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம், பொலிஸ் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago