2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

சு.க உடன் அரசாங்கத்துக்குப் பிரச்சினை இல்லை

Nirosh   / 2021 நவம்பர் 25 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான அமைச்சர் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுகளால் சபையில் ஆத்திரமடைந்த முன்னாள் ஜனாதிபதியை அமைதிப்படுத்தும் நோக்கில், அமைச்சர் தினேஸ் சபையில் உரையாற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும்போது, அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த சமயத்தில் சபையில் இருக்க வேண்டும் என அவருக்கு அறிவிக்க வேண்டும். இதுவே பாராளுமன்ற சம்பிரதாயம் என்றார். 

பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி செலவீனங்கள் தலைப்புக்குக் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எந்தவொரு இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை குறிப்பிடவில்லை என்றார். 

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்த செலவீன குறைப்புக்களை அன்று பாராளுமன்றத்தில் பலரும் பேசினார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை. இதுதொடர்பில் மஹிந்தானந்தவுடன் தான் பேசுவதாகவும் தெரிவித்தார். 

அரசியல்ரீதியாக கட்சிக்களுக்கிடையான பிரச்சினையாக பார்க்க வேண்டாம். அவ்வாறான பிரச்சினைகள் எதுவும் உருவாகவில்லை எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X