2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதித்தேர்தலில் கம்பியூட்டர் வாக்கு மோசடி குறித்தும் ஆராயப்படும் - ஜே.வீ.பீ

Super User   / 2010 மார்ச் 02 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

                     பி.எம்.முர்ஷிதீன்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்பதன் காரணமாகத்தான் நாம் வாக்குகளை மீண்டும் கணக்கிடவேண்டும் எனக்கோரியிருக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணணி மூலம் மோசடி செய்யப்பட்டிருந்தால் ஏன் எதிர்க்கட்சியினர் அதனை குறிப்பிடவில்லை என பல மேடைகளில் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் அநுர குமார திஸாநாயக்காவிடம் கேள்வி எழுப்பியது.

நாம் அந்தக்கட்டத்துக்கு இன்னும் வரவில்லை. மீள் வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் கணணியில் உள்ள வாக்குகளின் எண்ணிக்கை குறித்து ஆராயப்படும் என்று அவர் பதிலளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .