2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ஆட்சியை மாற்ற அரசு நடவடிக்கை

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றால், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பி.பி.சி சந்தேசய செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டிலேயே, அரசியல் சாசன அமைச்சர் டி.யூ.குணசேகர இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ஆட்சி முறைமையை ரத்துச் செய்தல் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். இதற்காக புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் டி.யூ.குணசேகர குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஆட்சி முறைமையை ரத்துச் செய்தல் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகியன நாட்டு மக்களின் அபிப்பிராயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், புதிய அரசியல் முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கான காலஎல்லையைக் கூறமுடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதான அரசியல் தீர்வுத் திட்டங்களும் முன்வைக்கப்படும் எனவும் டி.யூ.குணசேகர மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .