2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு G- 15 நாடுகளின் புதிய தலைமைப் பதவி

Super User   / 2010 மே 03 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் நடைபெறவுள்ள 14வது  G- 15 நாடுகளின் உச்சி மாநாட்டின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கவிருப்பதாக  வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

G- 15 நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே 17ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவிற்கும் ஈரான் ஜனாதிபதி அஹமட் நிஜாதிற்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்டினா, பிறேஸில், சிலி, எகிப்து,இந்தியா, இந்தனேஷியா ஜெமேக்கா,கென்யா, நைஜீரியா மலேஷியா மெக்ஸிக்கோ, பெரு, செனகல், இலங்கை,வெனிசுவேலா மற்றும் சிம்பாபே போன்ற நாடுகள் G- 15 அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

தற்பொது இவ்வமைப்பின் தலைவராக ஈரான் ஜனாதிபதி அஹமட் நிஜாத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0

  • The Analyst Tuesday, 04 May 2010 12:39 PM

    ஜீவனில்ல அமைப்புக்கு ஒரு தலைவன் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .