2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் இணைப்பு செயலாளருக்கு எதிராக விசாரணை

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டமை தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் இணைப்புச் செயலாளர் சேனக சில்வாவுக்கு எதிரான விசாரணைகளை பெல்ஜியம் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. 

சட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தை பெல்ஜியம் அதிகாரிகள் அணுகவிருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சேனக சில்வாவினால் இலங்கையிலுள்ள சர்வதேச வங்கியினுடைய உள்ளூர் வங்கிக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக பெல்ஜியம் அதிகாரிகள் இலங்கைக்கு வரவிருப்பதாக தகவல் குறிப்பிடுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .