2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் நீதிமன்ற விசாரணையை ஏப்ரல் 22க்கு முன்னர் நடத்த ஏற்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னராக நடத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக ஜனநாயக தேசிய முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனநாயக தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பிரேரிக்கப்படவுள்ள அநுரகுமார திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் குற்றச்செயல்களைக் கண்டுபிடித்து அவரை நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .