2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சி;ஜே.வி.பி குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை கொலை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று குற்றஞ்சாட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காது, இயற்கையாக மரணமடையச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேயர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, ஜெனரல் சரத் பொன்சேகா எந்தவித நோய்த் தாக்கத்திற்கும் உள்ளாகவில்லை என வைத்தியர்கள் கூறியதாக குறிப்பிட்டார்.  


  Comments - 0

  • xlntgson Monday, 29 March 2010 09:42 PM

    சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பவரை கொல்வது எப்படி? உயிர் தியாகமா அல்லது தற்கொலையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .