2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை பார்வையிடுவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அடுத்த வாரம் ஜெனரல் சரத் பொன்சேகா  தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்லவுள்ளனர்.

தடுப்புக்காவலிருக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்கு  வழங்கப்பட வேண்டிய வசதிகள் சிபாரிசு செய்தவாறு வழங்கப்படுகின்றனவா என்பதைப் பார்வையிடுவதற்காகவே அங்கு செல்லவிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு  வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை சென்று பார்வையிட்ட மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள், சரத் பொன்சேகாவுக்கான சில வசதிகளை சீரமைக்குமாறு ஆணையாளரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.

எனவே, மேற்படி சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா என்பதைப் பார்வையிடுவதற்காக அடுத்த வாரம் ஜெனரல் சரத் பொன்சேகா  தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மீண்டும் செல்லவிருப்பதாகவும் அந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .