2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை விடுவிப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னணியில்-ஹகீம்

Super User   / 2010 ஏப்ரல் 04 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளுடன் என்றும் முன்னணியில் நிற்கும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

இலங்கையின் தனியார் ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ரவூப் ஹகீம் கருத்து வெளியிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா மிகவும் கீழ்த்தரமான முறையில் கைதுசெய்யப்பட்டார். அது மாத்திரமல்ல,தொடர்ந்தும் அவருக்கு எதிராக அநியாயம் இழைக்கப்படுகின்றது என்றும் ரவூப் ஹகீம் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .