2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் மீது சட்டத்தரணிகள் தாக்குதல்?

George   / 2017 மே 20 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-  டிக்கோயா நகரசபையின் முன்னாள்  தலைவர் அழகமுத்து நத்தகுமார் மீது, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தாக்குதலுக்கு உள்ளான அவர், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹட்டன் நகரில் உள்ள விழா மண்டபமொன்றில் நேற்று (19) இரவு சட்டத்தரணிகளால்  ஏற்பாடு ​செய்யப்பட்ட நிகழ்வில் முன்னாள் தலைவர் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது, சட்டத்தரணிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் தன்மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் தலைவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .