2026 மார்ச் 07, சனிக்கிழமை

தீபச்செல்வனிடம் ரி.ஐ.டி. விசாரணை

Freelancer   / 2024 ஏப்ரல் 12 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காகத் தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நா.யோகேந்திரநாதனின் '34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு' என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்தப் புத்தக வெளியீடு தொடர்பாக நேற்று விசாரணை இடம்பெற்றது என்று தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .