2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு-இந்தியத் தூதுவர் சந்திப்பு

Super User   / 2010 மே 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்றை இன்று நண்பகல் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தவுடன் மேற்கொண்டுள்ளனார்.

இச்சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தமிழ்மிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், புதிதாக நாடாளுமன்றத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களை வரவேற்கும் நிகழ்வாக இருந்தது.

இச்சந்திப்பில் தற்கால அரசியல் நிலவரம், தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், அதி உயர் பாதுகாப்பு வலையம்  மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் அவரிடம் வினவிய போது அவர் அது தொடர்பாக கருத்துக் கூற மறுத்துவிட்டார்.(R.A)    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .