2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தமி​ழர்​களை ஒன்​று​ப​டுத்​தவே 'நாம் தமிழர்' அரசியல் கட்சி உருவாக்கம் -சீமான்

Super User   / 2010 ஏப்ரல் 11 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுச்​சி​மிகு சக்​தி​யாக தமி​ழின மக்​களை ஒன்​று​ப​டுத்​தவே 'நாம்  தமி​ழர்' இயக்​கம் அர​சி​யல் கட்​சி​யாக மாறு​கி​றது என்​றார் அந்த இயக்​கத் தலைமை ஒருங்​கி​ணைப்​பா​ளர் திரைப்பட இயக்குனர் சீமான்.​​

தஞ்​சா​வூ​ரில் அவர் வெள்​ளிக்​கி​ழமை அளித்த பேட்டி:​​ ​ "நாம் தமி​ழர்" இயக்​கத்தை அர​சி​யல் கட்​சி​யாக மாற்​றும் தமி​ழின எழுச்சி அர​சி​யல் மாநாடு மது​ரை​யில் மே 18-ல் நடை​பெ​று​கி​றது.​ இது தமி​ழர்​க​ளுக்​கான அர​சி​யல் கட்​சி​யா​கத் தொடங்​கப்​ப​டு​கி​றது.​​ ​

இந்​திய தேசி​யம்,​​ திரா​வி​டம் என்ற பெயர்​க​ளில்​தான் இது​வரை தமி​ழ​கத்​தில் கட்​சி​கள் உள்​ளன.​ தமி​ழி​னத்​திற்​கென்று ஓர் அர​சி​யல் கட்​சி​யைத் தொடங்க வேண்​டி​யது இன்​றைய காலத்​தின் கட்​டா​ய​மா​கி​விட்​டது.​​ ​

ஈழத்​தில் முன்​பி​ருந்​த​தை​வி​ட​வும் அதி​க​மாக தமி​ழன் கொடு​மைக்கு ஆளாக்​கப்​ப​டு​கி​றான்.​ உல​கம் முழு​வ​தும் 12 கோடித் தமி​ழர்​கள் இருந்​தும் ஈழத் தமி​ழ​னுக்கு உதவ முடி​ய​வில்லை.​​ ​ இலங்கை கடல் படை​யி​னால் நாள்​தோ​றும் தமி​ழக மீன​வர்​கள் நடுக்​கட​லில் சித்​தி​ர​வதை அனு​ப​விக்​கின்​ற​னர்.​

இது​வரை 500 தமி​ழக மீன​வர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ள​னர்.​ மத்​திய,​​ மாநில அர​சு​கள் அவர்​க​ளைப் பாது​காக்க எந்த முயற்​சி​யும் செய்​ய​வில்லை.​ அவர்​க​ளுக்கு ஆத​ர​வாக எச்​ச​ரிக்கை விடு​வ​தற்​குக்​கூட அர​சு​கள் முய​ல​வில்லை.​​ ​ பல்​வேறு உலக நாடு​கள் இலங்கை அரசு போர்க் குற்​றம் செய்​தி​ருப்​ப​தைச் சுட்​டிக்​காட்​டு​கின்​றன.​ ஆனால்,​​ இந்​திய அரசு இந்த விஷ​யத்​தில் மௌ​ன​மாக இருக்​கி​றது.​ இந்​நி​லை​யில் தமிழ் இனத்​திற்​கென்று,​​ மொழிக்​கென்று அர​சி​யல் கட்சி அமைக்க வேண்​டி​யது அவ​சி​யம்.​

தமி​ழர்​களை ஆள்​ப​வர்​கள் தமி​ழன் துய​ரப்​ப​டும்​போது உத​வ​வில்லை.​ எனவே,​​ தமி​ழ​ரைப் பாது​காக்க ஓர் அர​சி​யல் கட்சி தேவை.​​ ​ இந்​தக் கட்​சி​யின் கொடி அறி​முக விழா சனிக்​கி​ழமை  தஞ்​சா​வூ​ரில் நடை​பெ​று​கி​றது.​

.​ திரா​வி​டக் கட்​சி​க​ளு​டன் கூட்​டணி அமைக்க மாட்​டோம்.​ அப்​ப​டி​யொரு நிலை ஏற்​பட்​டால்,​​ கட்​சி​யைக் கலைத்​து​விட்டு திரைத் துறைக்​குச் சென்று விடு​வேன்.​ தமி​ழின அமைப்​பு​கள் விரும்​பி​னால்,​​ அவர்​க​ளைத் தேர்த​லில் சேர்த்​துக் கொள்​வோம்.​​ ​ கட்சி தொடங்​கிய பின்​னர்,​​ ஊர் ஊரா​கச் சென்று இளை​ஞர்​க​ளி​டம் தமி​ழின உணர்​வு​க​ளைப் பரப்​பு​வோம்.​ அர​சி​யல் வகுப்​பு​கள் நடத்தி,​​ இளை​ஞர்​களை வழி நடத்​து​வோம்​ என்​றார் சீமான்.​​ ​


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .