2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தமிழர் விடுதலை கூட்டணியின் குற்றச்சாட்டுக்கு ஈ.பி.டி.பி கண்டனம்

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் ஆயுதக் குழுக்கள் இயங்கிவருகின்றன என்று தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த குற்றச்சாட்டை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தையா குற்றஞ்சாட்டுகிறது என்று  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் எம்.ஸ்ராலின்கேள்வி எழுப்பினார்.

தமது கட்சி ஆயுதங்கள் எதனையும் வைத்திருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் கூறினார். இந்த நிலையில், குறித்த மாணவனின் கொலைச் சம்பவத்திற்கு தம்மால் பொறுப்புக் கூறமுடியாது எனவும் அவர்  தெரிவித்தார்.

அனைத்து ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களையும் களையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதமொன்று அனுப்பிவைத்திருக்கும் அதேவேளை, குறித்த கடிதத்தின் பிரதியை ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தையா குற்றஞ்சாட்டுகிறது என்று  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் எம்.ஸ்ராலின்கேள்வி எழுப்பினார்.

தமது கட்சி ஆயுதங்கள எதனையும் வைத்திருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் கூறினார். இந்த நிலையில், குறித்த மாணவனின் கொலைச் சம்பவத்திற்கு தம்மால் பொறுப்புக் கூறமுடியாது எனவும் அவர்  தெரிவித்தார்.

அனைத்து ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதமொன்று அனுப்பிவைத்திருக்கும் அதேவேளை, குறித்த கடிதத்தின் பிரதியை ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தையா குற்றஞ்சாட்டுகிறது என்று  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் எம்.ஸ்ராலின் கேள்வி எழுப்பினார்.

தமது கட்சி ஆயுதங்கள எதனையும் வைத்திருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் கூறினார். இந்த நிலையில், குறித்த மாணவனின் கொலைச் சம்பவத்திற்கு தம்மால் பொறுப்புக் கூறமுடியாது எனவும் அவர்  தெரிவித்தார்.

அனைத்து ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதமொன்று அனுப்பிவைத்திருக்கும் அதேவேளை, குறித்த கடிதத்தின் பிரதியை ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .