2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு; இந்திய அரசாங்கம் அழைப்பு

Super User   / 2010 மார்ச் 07 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE  இலங்கை தமிழரின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இறுதி முடிவுகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது என கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராச தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

.இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்,இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச்செயலாளர் நிருபமா ராவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில்,மாவை சேனாதிராசாவும்,சுரேஷ் பிரேமச்சந்திரனும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கை அரசாங்கம், இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை அவசர,அவசரமாக வெவ்வேறு இடங்களில் கொண்டுபோய் இறக்கியுள்ளது.எனினும்,அவர்களது சொந்த இடஙகளுக்கு இன்னும் போய் சேரவில்லை என்பதை தாம் எடுத்துக்காட்டியதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

அதுமாத்திரமல்லாமல்,அரசாங்கம் திட்டமிட்ட காணிச்சுவீகரிப்பை வடபகுதியில் மேற்கொண்டுள்ளது.சுமார் 500 இராணுவ முகாம்களையும்,50க்கும் மேற்பட்ட பொலீஸ் நிலையங்கலையும் திறந்துவைப்பதில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக உள்ளது.

இதனால்.தமிழ் மக்களின் கானிகள் கபளீகரம் செய்யப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதையும் கூட்டமைப்பு நிருபமா ராவிடம் தெளிவுபடுத்தியதாக மாவை சேனாதிராசா கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் காலம் என்பதால் அரசாங்கத்துடன் பேசக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்றும் ,நாடாளுமன்றத்தேர்தல் முடிவடைந்தவுடன் இந்திய அரசாங்கம் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் என நிருபமா ராவ் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு,இது குறித்து  பேச்சு நடத்த இந்திய அரசாங்கம் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கும் என்றும்  நிருபமா ராவ் உறுதியளித்ததாக மாவை சேனாதிராசா மேலும் கூறினார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான  இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா,அரசியல் விவகாரப்பொறுப்பாளர் ஷியாம்,பிரதிதூதுவர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .