2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் புதிய கட்சி

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் விடுதலைப்  புலிகள் சார்பான புதிய கட்சியொன்று தமிழ் நாட்டில்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த அமைப்பின் ஏனைய தலைவர்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு தமிழ் நாட்டில் இந்தக் கட்சி  ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவிருப்பதாக இந்திய திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கடந்தகாலங்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களிலும் கலந்துகொண்டிருந்தார்.
 

 
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .