2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தாயாரினால் ஆற்றில் வீசி எறியப்பட்ட 4 வயது சிறுவர் இன்று உயிரிழந்தார்

Super User   / 2010 மார்ச் 20 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, களுகங்கை ஆற்றில் தன்னுடைய சொந்தத்தாயாரினால் வீசி எறியப்பட்ட நான்கு  வயது சிறுவர் இன்று உயிரிழந்தார்.

காலை 11.20 மணியளவில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றது.

கடந்த 11 ஆம் திகதி ஆற்றில் தூக்கி வீசி எறியப்பட்ட அமில சந்தருவன் பெர்ணாண்டோ என்ற இச்சிறுவர் வாகன சாரதியொருவரால் பொது மக்களின் உதவியுடன்  மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒன்பது நாட்களாக இச்சிறுவர் உயிருக்காகப்போராடிக்கொண்டிருந்தார்.அமிலவின் உயிரைக்காப்பாற்றுவதில் வைத்தியர்கள் அனைவரும் பெரு முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச்சிறுவரின் தந்தை குடும்பத்தை விட்டும் வெளியேறிய நிலையில் தாயார் லொத்தர் டிக்கெட் விற்பனை மூலம் குழந்தைகளை பராமரித்து வந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .