2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வெற்றியீட்டினால் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு -தங்கேஸ்வரி

Super User   / 2010 மார்ச் 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கே.தங்கேஸ்வரி உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றுகையில், இந்தக் கோரிக்கையை பிரதானமாக முன்வைத்ததாக தமிழ்மிரர் இணையதளத்திடம் இன்று கூறினார்.

அத்துடன், 30 வருடங்களாக யுத்தத்தால் இழந்தவைகள் அனைத்தையும் ஈடுசெய்வோம் என்பதுடன், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைத்தல் ஆகிய கோரிக்கைகளை  முன்வைத்தும்  தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதாகவும் கே.தங்கேஸ்வரி குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாகவே, தாம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு தேத்தாதீவு, எருவில் மற்றும் மகிழ் ஊர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டிருந்ததாகவும் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .