2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தேர்தல் கடமைகளில் முப்படையினரின் உதவி-பொலிஸ்மா அதிபர்

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் முப்படையினர் நிறுத்தப்படவிருப்பதாக பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

வன்முறைச் சம்பவங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம், தேர்தல்கள் ஆணையாளர் தயனாந்த திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .