Freelancer / 2024 ஜூன் 15 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாணவிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தார்.
புதிய வகுப்பறைகளை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கல்லூரி மாணவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளை முடித்துத் தருமாறு மாணவிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு கட்டங்களாக கட்டட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியதுடன், கோஷங்களை எழுப்பி காலத்தைக் கடத்தும் காலம் இதுவல்ல என்றும் வலியுறுத்தினார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு புதிய பாதையில் செல்ல வேண்டும் எனவும், அதற்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் விரைவான அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். (a)




15 minute ago
30 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
30 minute ago
37 minute ago