2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தெற்கில் கடல் கொந்தளிப்பு

Princiya Dixci   / 2017 ஜூன் 05 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மாகாணத்தின் பல பிரதேசங்களில், இன்று (05) காலை, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ள அதேவேளை, சில பிரதேசங்களில் காலி வீதியை நோக்கி, கடல்நீர் பாய்ந்ததால், மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர்.

கஹாவ சந்தியிலிருந்து காலி, ஹிக்கடுவ, கொட்டகமுவ பாலம் வரையான காலி வீதிக்குள், கடல் நீர் பாய்ந்ததாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கஹாவ, கொடகம, தெல்வத்த, பெரேலிய மற்றும் தொட்டகமுவ போன்ற பிரதேசங்களில், மழைக்காலங்களில் இவ்வாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், கடல் நீர் காலி வீதியை நோக்கிப் பாயும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .