2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் பிரவேசிக்க ஜெனரல் பொன்சேகாவுக்கு அனுமதி மறுப்பு

Super User   / 2010 மே 05 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று நடைபெறவிருக்கும் நிலையிலேயே, அவர் நாடாளுமன்றத்திற்கு சமுகமளிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் ஏகமனதாக கோரிக்கை விடுத்தனர்.

ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்து, ஆளும் கட்சி உறுப்பினரும் அமைச்சருமான் விமல் வீரவன்ஸவும் குறித்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினார்.

சரத் பொன்சேகாவின் அரசியல் எண்ணக்கருக்கள் மாறுபட்டதாக இருந்தபோதிலும், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று விமல் வீரவன்ஸ மேலும் கூறினார்.

இதனையடுத்து, கருத்துத் தெரிவித்த சபாநாயக சமல் ராஜபக்ஸ,  சம்பவம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .