2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நாளை இந்தியத் தூதுவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

Super User   / 2010 மே 02 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நாளை நண்பகல் இந்திய இல்லத்தில் நடைபெறவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார். 

இச்சந்திப்பில் தற்கால அரசியல் நிலவரம், தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.(R.A)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .