2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாவலப்பிட்டியில் விசேட அதிரடிப்படை: ஆணையாளர் இணக்கம் ; பொலீஸாரில் நம்பிக்கையில்லை - மனோ கணேசன்

Super User   / 2010 ஏப்ரல் 06 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் மாத்திரம் வாக்களிப்பு நிலையங்களில் விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு விடுத்த வேண்டுகோளை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சற்றுமுன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் யானைச்சின்னத்தில் மனோ கணேசன் போட்டியிடுகின்றார்.

நேற்று கொழும்பில் தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்தில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திதுப்பேசினார்.இச்சந்திப்பின்போதே ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தோட்டத்தொழிலாள மக்கள் வாக்களிக்கச்செல்லும்போது அச்சுறுத்தப்பட்டனர்.அவர்களது வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும் மனோ கணேசன் மேலும் கூறினார்.

தங்களுக்கு நாவலப்பிட்டி பொலீஸ் நிலைய அதிகாரிகள் விடயத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தமிழ்மிரர் இனையதளத்திடம் மனோ கணேசன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .