2021 ஜூன் 16, புதன்கிழமை

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி பகுதிகளில் வன்முறை ஏற்படக்கூடிய அபாயம்

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ஒரு சில குழுவினரின் தவறான வழிநடத்தல்களின் மூலம் வன்முறைகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் மீள் தேர்தலில் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்குமாறு பொதுமக்களிடம், பொலிஸ் தலைமையகத்தின் தேர்தலுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ன கோரிக்கை விடுத்தார்.

மேற்படி இரண்டு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .