2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பாதுகாப்புச்செயலாளருக்கு அரசியல் செய்யும் அதிகாரம் உள்ளதா ? - ரவூப் ஹகீம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாயவுக்கு அரசியல் செய்யும் அதிகாரம் இந்த நாட்டின் சட்ட விதிகளில் இருக்கின்றதா என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டி நகரின் மத்திய பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ரவூப் ஹகீம் உரையாற்றினார்.கோத்தபாய ராஜபக்ஸ அக்குறனைக்கு விஜயம் செய்கின்றார் என்பதற்காக எனது கட்சியின் காரியாலயத்தை கட்டுகஸ்தோட்டை பொலீஸ் நிலையப்பொறுப்பதிகாரி இழுத்து மூடியுள்ளார்.

ஆளும் கட்சியின் அலுவலகங்களை எல்லா இடங்களிலும் திறக்கின்றார்கள். ஆனால்,எமக்கு மாத்திரம் தடை விதிக்கின்றார்கள்.

இரண்டுமுறை கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு அரசியல் கட்சியின் தலைவராகிய எனக்கே இப்படியென்றால்,இப்பிரதேசத்தில் எவ்வாறு சட்டம்,ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றும் ரவூப் ஹகீம் கேள்வி எழுப்பினார்.

இதில் சம்பந்தப்பட்டுள்ளோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .