2021 ஜூன் 16, புதன்கிழமை

புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் ஐ.தே.கவை சீரமைக்க முடியாது-ராஜித

Super User   / 2010 மே 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக சஜித் பிரேமதாசவோ அல்லது வேறொருவரோ நியமிக்கப்பட்டாலும் கூட பழைய நிலைக்கு கட்சியை கொண்டுவர முடியாது என புதிய மீன்பிடி மற்றும் கடற்றொழில் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்

ஐக்கிய தேசியக்  கட்சியில் 2006ஆம் ஆண்டிலிருந்து பிளவு ஏற்பட்டிருப்பதுடன், கட்சி சீர்குலைந்து காணப்படுவதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார். கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .