2021 ஜூன் 19, சனிக்கிழமை

பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமனம்;எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேர்வின் சில்வாவை  அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களை தாக்கியும், அவமானப்படுத்தியும் உள்ள  ஒருவரை எந்த நாடு அமைச்சராக நியமிக்கும் எனவும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவரை முக்கியமான பதவியில் நியமித்ததன் மூலம் அரசாங்கம் தனது பொறுப்பற்ற நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .