2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாட்டில் உலக தமிழர் பேரவை;அரசு குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழர் பேரவையானது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது இலங்கைக்கு  எதிரான ஒரு பிரச்சார நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் கலந்துகொண்டமையை  ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். இது இலங்கையின் இறைமைக்கு எதிரான செயற்பாடு  என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார். நாடு கடந்த தற்காலிக அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிப்பதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .