2021 ஜூன் 21, திங்கட்கிழமை

புலிகளால் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு தாங்கி கண்டுபிடிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு தாங்கியொன்று விசேட பொலிஸ் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்புப் பகுதியில் இந்த எரிபொருள் நிரப்பு தாங்கி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார். 18 அடி நீளமும், 8 அடி அகலத்தையும் கொண்டதான இந்த  எரிபொருள் நிரப்பு தாங்கியானது 25,000 லீற்றர் எரிபொருளைக் உள்ளடக்கும் எனவும் அவர் கூறினார்.

வடபகுதிகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .