2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பெல்ஜிய அரசு பொன்சேகாவின் ஆதரவாளருக்கு எதிராக இலங்கையில் வழக்குத்தாக்கல் - சி.ஐ.டி

Super User   / 2010 மார்ச் 02 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியம் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களில் ஒருவரான சேனக டி சில்வா என்பவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது என குற்றப்புலனாய்வுப்பிரிவு வட்டாரங்கள் டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

நிதி மோசடி சம்பந்தமாக சேனக டி சில்வா பெல்ஜியத்தில் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இது குறித்து வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டபோது, இலங்கைக்கு எந்தவித வேண்டுகோளும் விடுக்கப்படவில்ல எனத்தெரிவிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள பெல்ஜியத்தூதரகம் கூட தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .