2021 ஜூன் 24, வியாழக்கிழமை

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாக்குகள் பிரி.அரசாங்கத்தின் ஒரே இலக்கு - கருணா

Super User   / 2010 மார்ச் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

பொதுதேர்தலை அடிப்படையாகக் கொண்டே பிரிட்டிஷ் பிரதமரும் வெளிநாட்டமைச்சின் செயலாளரும் லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டில் கலந்துகொண்டனர் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

சுமார் நாற்பதாயிரம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பிரிட்டனில் வாக்குரிமை கொண்டவகளாக உள்ளனர்.இவர்களது வாக்குகளை  நோக்காகக்கொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழ் மக்களின் மீது தன்னுடைய அனுதாபத்தை காட்டுகிறது என்றும் அமைச்சர் முரளிதரன் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே மாதம் பிரிட்டனில் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது  கோர்டன் பிரவுன் தலைமையிலான தொழிற்கட்சி ஆட்சி செய்கின்றது.

எதிர்வரும் தேர்தலில் தொழிற்கட்சி தோல்வி அடையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .