2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பிள்ளையான் புதுடில்லிக்கு விஜயம்

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடில்லிக்கு புறப்படவுள்ளார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே,  இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இந்த அழைப்பினை விடுத்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்தார். 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தேர்தல் விஞ்ஞாபனத்தை நிருபமா ராவ் பார்வையிட்டிருப்பதாகவும் அவர் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம், நிருபமா ராவ் உறுதியளித்திருந்ததாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .