2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பஸ் மோதி 4 வயது குழந்தை உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலுமகர சந்தியில் பஸ் மோதி நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், அக்குழந்தையின் தாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பஸ் விபத்தையடுத்து, ஊர்மக்கள் குறித்த பஸ்ஸை எரிக்க முற்பட்டனர். எனினும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததனால் அதனைக் கைவிட்டனர்.

குறித்த தாயும், குழந்தையும் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

பஸ் சாரதியை பொலிஸார் கைதுசெய்ததாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி.பிரசாந்த ஜயக்கொடி டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .