2025 ஜூலை 05, சனிக்கிழமை

'பாடசாலைக் கதவை அடைத்தது ஏன்?'

Thipaan   / 2016 மார்ச் 14 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தாலும் பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசியலமைப்பின் 27(2)(ஏ)பிரிவின் பிரகாரம் சகல பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை மனித உரிமை இருப்பதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், உயர்நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

மாணவனொருவன், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியான வதந்தியால், பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ள முடியாமல் போனமைக்கு எதிராக மற்றும் அதனூடாக அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர், தாக்கல் செய்திருந்த அடிப்படைய உரிமை மனுவை ஆராய்ந்து பார்த்தபோதே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வியமைச்சர், வடமேல் மாகாண சபையின் கல்வியமைச்சர் ஆகியோர், மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையிலேயே ஆராயப்பட்டது.

இந்த பிள்ளையை, அரச பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாது ஏனென, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரீன் புள்ளை, பிரதமர் நீதியரசரிடம் வினவினார்.

அந்தப்பிள்ளை, கண்டி திருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கல்வியமைச்சின் முன்னுரிமையில், சகல செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சேனாதி தயாரத்ன, அப்பிள்ளையை கண்டி திருத்துவக்கல்லூரியில் சேர்த்ததன் பின்னரே, அரசாங்கத்தின் கவனம் திருமியதாகவும் எனினும், அரச பாடசாலைகள் எந்தவொன்றிலும் அவர், சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், பிரச்சினைக்கு தீர்வு கண்டிருப்பதனால், மனுமீதான விசாரணையை இத்துடன் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

எனினும், ஏதாவதொரு பிரச்சினைகள் ஏற்படுமாயின் மனுதார், மோஷன் ஊடாக காரணங்களை முன்வைத்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கு முடியும் என்றும் சுட்டிக்காட்டியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .