2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிலியந்தலை விவகாரம்:‘விரைவில் சிக்குவர்’

Princiya Dixci   / 2017 மே 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலையில் போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் முக்கிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

மேலும், குறித்த துப்பாக்கிதாரிகள், மோட்டார் வாகனத்தில்  சென்ற பாதை தொடர்பிலும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தது.

பிலியந்தலை நகரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .