2021 ஜூலை 31, சனிக்கிழமை

மகாவலி நிலையத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி நிலையத்தின் புதிய பணிப்பாளராக அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (08) முற்பகல் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் விஸ்வா வர்ணபாலவின் மறைவையடுத்து வெற்றிடமாயிருந்த இப்பதவிக்கு அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். 

களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மென்செஷ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைகழகங்களில் பட்டப்பின்படிப்பு பட்டதாரியான லேகம்கே, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் சிலோன் எசெட் மெனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் த பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமைப்புரிந்துள்ளதுடன், இலங்கை செஞ்சலுவைச் சங்கத்திலும் முக்கியப் பதவியை வகித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .